மீண்டும் இணைய உள்ள சிங்கம் ஜோடி! சூர்யாவின் புதிய படத்தில் அனுஸ்கா?!

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான என்.ஜி.கே மற்றும் காப்பான் எதிர்பார்த்த

By manikandan | Published: Nov 19, 2019 01:40 PM

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான என்.ஜி.கே மற்றும் காப்பான் எதிர்பார்த்த பெரிய  வெற்றியை பெற தவறியது. ஆதலால் அடுத்த படத்தை எப்படியும் பெரிய ஹிட்டாக கொடுக்க வேண்டும் என சூர்யா தீவிரமாக கதை ஆலோசித்து வருவதால் அடுத்து அவர் யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என தகவல் இன்னும் வெளிவராமல் இருக்கிறது. இவரது நடிப்பில் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தான் சுதா கொங்காரா இயக்கியுள்ள சூரரை போற்று திரைப்படம் வெளியாக உள்ளது. இதனை அடுத்து கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் புதிய படத்தில் சூர்யா நடிக்க உள்ளர். இந்த படத்தை கோமாளி பட தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தயாரிக்க உள்ளார். இப்படத்தில் நாயகியாக நடிக்க வைக்க அனுஸ்காவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம், சூர்யா - அனுஷ்கா இருவரும் சிங்கம் 1 , 2 , 3 ஆகிய மூன்று படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Step2: Place in ads Display sections

unicc