"சின்ன தல" ரெய்னாவிற்கு அறுவைச் சிகிச்சை !

இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா.கடந்த சில வருடங்களாக இந்திய அணியில் இவருக்கு 

By murugan | Published: Aug 10, 2019 11:15 AM

இந்திய அணி வீரர் சுரேஷ் ரெய்னா.கடந்த சில வருடங்களாக இந்திய அணியில் இவருக்கு  இடம் கிடைக்காமல் உள்ளுர் போட்டியான ஐபிஎல்  தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு துணை கேப்டனாக இருக்கும் சுரேஷ் ரெய்னாவை "சின்ன தலா " என ரசிகர்கள் அழைப்பார்கள்.இந்நிலையில் கடந்த சில நாள்களாக சுரேஷ் ரெய்னா முழங்கால் வலியால் அவதி பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள மருத்துவமனையில் ஒன்றில் அனுமத்திக்கப்பட்டு நேற்று அறுவை சிகிச்சை  செய்யப்பட்டது.மேலும் 4 அல்லது 6 வாரங்கள் வரை சுரேஷ் ரெய்னா ஓய்வு எடுக்கவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த தகவலை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பதிவிட்டு உள்ளது.
Step2: Place in ads Display sections

unicc