உலக பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தை வென்ற சூரத் இளம்பெண்.!

  • குஜராத்தைச் சேர்ந்த ரோமா ஷா இளம்பெண் மாஸ்கோவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
  • கடந்த ஆண்டு அவர் வென்ற பதக்கங்களை சேர்த்தால், இதுவரை 8 தங்கப் பதக்கங்களையும், 2 வெள்ளிப் பதக்கங்களையும் குவித்திருக்கிறார். 

குஜராத்தைச் சேர்ந்த ரோமா ஷா கணினி பொறியியல் படிப்பை படித்து வருகிறார். இவர் பளு தூக்குவது ஆண்களுக்கு மட்டுமானது அல்ல, பெண்களும் பளு தூக்கலாம் என நிரூபித்த பெண். ரோமா ஷா அண்மையில் மாஸ்கோவில் நடைபெற்ற 2019-ம் ஆண்டுக்கான உலக மூல பவர் லிஃப்டிங் கூட்டமைப்பு( World Raw Power lifting Federation ) போட்டியில் பங்கேற்றார்.

இந்நிலையில், ரோமா ஷா மாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில் உள்பட சர்வதேச பளுதூக்கும் போட்டிகளில் 2 தங்கப் பதக்கங்களையும் 2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளார். பின்னர் கடந்த ஆண்டும் அவர் வென்ற பதக்கங்களை சேர்த்தால், இதுவரை 8 தங்கப் பதக்கங்களையும், 2 வெள்ளிப் பதக்கங்களையும் அந்த இளம்பெண் குவித்திருக்கிறார்.

இதனிடையே போட்டி முடிவில் ரோமா ஷா கூறுகையில், நான் கடந்த மூன்று ஆண்டுகளாக சர்வதேச போட்டியில் விளையாடுகிறேன். மற்றும் இந்தியாவில் இருந்து நான் மட்டுமே பெண் போட்டியாளராக பங்கேற்கிறேன், மேலும் 22-க்கும் மேற்பட்ட நாடுககளில் நடத்தும் சாம்பியன்ஷிப்பு போட்டியில் பங்கேற்றுள்ளன எனவும், எனக்கு பயிற்சியளித்த பயிற்சியாளரின் வழிகாட்டல் மூலம் இந்த சாதனையை எட்டியதாகவும், ரோமா தொடர்ந்து தனது பயிற்சிகளை மேற்கொண்டு தொடருவேன் என தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்