தாய்லாந்து நாட்டவர் 6 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த வட்டாச்சியர்.!

தாய்லாந்து நாட்டவர் 6 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த வட்டாச்சியர்.!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. 

இந்நிலையில், தாய்லாந்து நாட்டிலிருந்து 6 பேரில், சுற்றுலா விசா மூலமாக இந்தியா வந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொள்ளம்பாளையத்தில் மதபிரச்சார கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.இவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் மூலமாக இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலருக்கும் கொரோனா தொற்று அறியப்பட்டது. இதனால் இவர்கள் 6 பேர் மற்றும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரும் தற்போது பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இது தொடர்பாக வாட்டாச்சியர் பரிமளா தேவி, சூரம்பட்டி காவல்நிலையத்தில், தாய்லாந்து நாட்டை சேர்ந்த 6 பேர் மீது, நோய் தொற்று பரவ காரணமாக இருத்தல், பாஸ்போர்ட் விதிமீறல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளார். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube