ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரும் வழக்கு!!பிப்ரவரி 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை பிப்ரவரி 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் .

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.இந்நிலையில் ஸ்டெர்லைட்  ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனமும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

 

 

ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.தொடர்ந்து  நடைபெற்ற விசாரணையின் போது, தமிழகத்தின் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதிட்டார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்ட பிறகும் உரிய விதிகளை வேதாந்தா நிறுவனம் பின்பற்றவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

ஸ்டெர்லைட் வழக்கில் 3-ம் நாள் விசாரணை நிறைவு பெற்றது. அடுத்த விசாரணை இன்று தொடங்கும், இன்றைய தினம் இருதரப்பினரும் தங்களது வாதத்தை முடித்து கொள்ள வேண்டும் என்றும்  உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரும் வழக்கின் விசாரணை நடைபெற்றது.

பின்னர் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை பிப்ரவரி 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் .

Leave a Comment