உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சிறப்புமிக்கது - மு.க. ஸ்டாலின்

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு சிறப்புமிக்கது - மு.க. ஸ்டாலின்

உச்சநீதிமன்றம் #ConstitutionDay-வில், சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   மாகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்றபோது ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரியும்,நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியும்  சிவசேனா -காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் தரப்பில்  உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த  மனு மீதான விசாரணை நடைபெற்றது. அதில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம். இந்த தீர்ப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவில்,மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் #ConstitutionDay-வில், சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது. ஜனநாயகத்துடனும், அரசியல் சட்டத்துடனும் விபரீத விளையாட்டு நடத்தும் பாஜக அரசு இனியாவது திருந்த வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். 

Latest Posts

குணமாகியவர்கள் எண்ணிக்கை உலகளவில் 2.34 கோடியாக அதிகரித்துள்ளது!
கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாவது பரிசோதனையை தொடங்குகியது பாகிஸ்தான்.!
மாஸ்டர் திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா..?
கொரோனா தொற்றால் ராஜஸ்தான் மாநில முன்னாள் மந்திரி மரணம்....
மின்தடையால் திருப்பூர் மருத்துவமனையில் பறிபோன உயிர் - ஆட்சியர் விளக்கம்!
போக்குவரத்து விதி மீறல்களுக்கு இ-செல்லான் முறை கேரளாவில் தொடக்கம்.!
#IPL2020:ஆல்ரவுண்டர் மிட்செல்-மார்ஷ்க்கு காயம்! விளையாடுவது சந்தேகம்!!
#IPL2020:வாய்ப்பு கிடைத்தால் ரஸ்செல்லுக்கு தோள்கொடுக்க ஆசை!மோர்கன் மாஸ்!
வானில் உள்ள இலக்கை துள்ளியமாக தாக்கி அழிக்கும் அபியாஸ் ஏவுகனை சோதனை வெற்றி...
அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!