சிதம்பரம் ஜாமீன் மனு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை வழக்கில் திகார் சிறையில்  உள்ளார். இதனால் அமலாக்கத்துறை வழக்கில் சிறையில் உள்ள நிலையில் சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில்  ஜாமீன் கோரி மனு தாக்கல்  செய்தார் .ஆனால் அந்த மனுவில் அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது டெல்லி உயர்நீதிமன்றம்.
அங்கு மறுப்பு தெரிவித்த நிலையில் சிதம்பரம் தரப்பில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த நிலையில் இன்று இந்த ,மனு  மீதான விசாரணை நடைபெற்றது.அப்பொழுது அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறிழைக்கும் போது, சாதாரண மக்கள் நீதியின் மீதான நம்பிக்கையை இழக்கிறார்கள் என்று அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.இறுதியாக சிதம்பரத்தின் ஜாமீன்  மனு மீதான விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.மேலும் தற்போது நடத்த விசாரணை தொடர்பான அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்.