கிரண்பேடி வழக்கு : தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த தடையை நீக்கக் கோரிய  கிரண்பேடியின் வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இடையே அதிகாரப்போர் நடைபெற்று வருகிறது.நாளைடைவில் இருவருக்கும்மிடையே மோதல் போக்கு அதிகரித்து வந்த வண்ணமே இருந்தது.

எனவே கிரண் பேடிக்கு எதிராக புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை,புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட 2017ல் மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்த அனுமதி ரத்து செய்து  உத்தரவு பிறப்பித்தது.

இதனால் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த தடையை நீக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் கிரண்பேடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுக்களை  இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக அறிவித்து விட்டது.மேலும் புதுச்சேரியில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசிற்கே முழு அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தது உச்சநீதிமன்றம்.  புதுச்சேரி மாநில அமைச்சரவை முடிவை அமல்படுத்த விதித்த  தடை நீக்கியும்  உத்தரவு பிறப்பித்தது  உச்சநீதிமன்றம்.