கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செல்லும் உச்ச நீதிமன்றம்..! இடைத்தேர்தல் அறிவிப்பு..!

கர்நாடகவில் 17 அதிருப்தி எம்எல்ஏக்களை முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தது சரியே என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.
காங்கிரஸ் கட்சியை சார்ந்த 14 ,மதசார்பற்ற ஜனதாதன கட்சியை சார்ந்த 3 எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு ஆதரவாக செலயல்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 17 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்ததனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 17 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது சரியே என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.மேலும் 2 பேரின் வெற்றி ஏற்கனவே செல்லாது என வழக்கு உள்ள நிலையில் மீதம் முள்ள 15 இடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் தொகுதிகளில் டிசம்பர் 05-ம் தேதி  இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

author avatar
murugan