ரூ. 50 லட்சம் பில்கிஸ் பானுவிற்கு வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

குஜராத் மாநிலத்தில் கோத்ரா பகுதியில் 2002–ம் ஆண்டு ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து  கலவரம் நடந்தது .இந்த  கலவரத்தில் ஆமதாபாத் பகுதியை சேர்ந்த பில்கிஸ் பானு என்ற ஐந்து மாத கர்ப்பிணியையும் அவரது உறவுக்கார பெண்களையும் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்கள்.

இந்த சம்பவத்தில் பில்கிஸ் பானு 2 வயது குழந்தை உட்பட அவரது குடும்பத்தை சார்ந்த 7 பேரை அந்த கும்பல் கொடூரமாக கொலை செய்தனர். இந்த சம்பவத்திற்கு குஜராத்  அரசு வழங்கிய ரூ. 5 லட்சம் நிதியுதவி ஏற்க மறுத்தார்.பின் சுப்ரீம் கோர்ட்டில் சென்று கூடுதல் நிவாரணம் வழங்க கோரினார்.

இந்த வழக்கை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட்டு,  கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானுவுக்கு ரூ. 50 லட்சம் வழங்கவும் மேலும் அரசு வேலை வழங்கவும் குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது.

author avatar
murugan

Leave a Comment