தெலுங்கானா என்கவுண்டர்! உச்சநீதிமன்ற அனுமதியின்றி வேறு நீதிமன்றம் விசாரிக்க கூடாது!

  • தெலுங்கானா பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். 
  • இந்த என்கவுண்டர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவு படி நீதி விசாரணை நடத்தப்படவுள்ளது. 

கடந்த மாதம் 27ஆம் தேதி பெங்களூரு ஹைதிராபாத் நெடுஞ்சாலையில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இச்சமபவத்தில் ஈடுபட்ட முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவலு ஆகிய நான்குபேரையும் கைது செய்து கடந்த 6ஆம் தேதி போலீஸ் விசாரணையின் போது என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தை பலரும் பாராட்டினாலும், மனித உரிமை ஆணையம் இதனை எதிர்த்தது. விசாரணை தொடங்கினர்.

தற்போது இச்சம்பவத்தை ஆராய உச்சநீதிமன்றத்தின் உத்தரவு படி, ஓய்வு பெற்ற நீதிபதி V.S.சிர்புர்கார் தலைமையில் 3 அதிகாரிகள் கொண்ட குழு 6 மாதம் விசாரணை நடத்த உள்ளது. இதற்கிடையில் மற்ற எந்த நீதிமன்றத்திலும் இந்த துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கு விசாரணை நடத்த கூடாது எனவும் உத்தரவிடபட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.