காஷ்மீரில் ஊடகங்களுக்கு தடை -மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

காஷ்மீரில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது  தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு காஷ்மீரில் ஒரு சில இடங்களில்  144 தடை உத்தரவு பிறப்பித்தது.மேலும் அங்கு தொலைபேசி சேவையையும் ரத்து செய்தது மத்திய அரசு.

இந்த நிலையில் காஷ்மீரில் பத்திரிக்கையாளர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக கூறி டைம்ஸ் இதழின் ஆசிரியர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அதில், ஜம்மு காஷ்மீரில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது  தொடர்பாக மத்திய அரசு 7 நாட்களில் பதில் அளிக்க  உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.