#Breaking : 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்த தடை ! மற்ற மாவட்டங்களில் நடத்த அனுமதி

  • தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 
  • தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதித்து  உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மேலும் தொகுதி வரையறை பணிகள் நிறை வடைந்த பின்பு உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட உத்தரவிட  வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.திமுக தொடர்ந்த மனுவை போல புதிதாக பிரிக்கப்பட்ட  6 மாவட்டங்களை சேர்ந்த வாக்காளர் சார்பாக தாக்கல் செய்த மனுவும்,வக்கீல் ஜெயசுகீன் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.அந்த விசாரணையில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க சம்மதம் தெரிவித்தது.பின்பு வழக்கின் விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.பின்பு  நேற்றைய விசாரணையில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.அப்பொழுது  தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை  ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

9 மாவட்டங்களில், 4 மாதங்களில் மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் மறுவரையறை செய்த பின் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.