அமைதியான வழியில் போராடுபவர்களுக்கே ஆதரவு - ராகுல்காந்தி

நாடு முழுவதும் குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

By venu | Published: Dec 16, 2019 01:40 PM

  • நாடு முழுவதும் குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அதிகரித்து வருகிறது.
  • அமைதியான வழியில் போராடுபவர்களுக்கே ஆதரவு என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியதற்கு நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.குறிப்பாக டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.இந்த தடியடி தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் இன்று மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.தொடர்ந்து போராட்டங்கள் மாநிலங்கள் முழுவதும் வலுத்து வருகின்றது. இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், கடுமையான சட்டங்களை எதிர்க்க சத்யாகிரகமே சிறந்த போராட்ட முறை ஆகும். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, அமைதியான வழியில் போராடுபவர்களுக்கே ஆதரவு அளிக்கிறேன் என்று ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.   
Step2: Place in ads Display sections

unicc