சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனிக்கட்சி துவங்கினால் நான் வரவேற்பேன் : நடிகை நளினி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில்

By Fahad | Published: Mar 28 2020 05:17 PM

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 2.0 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை நளினி அளித்துள்ள பேட்டி ஒன்றில், திரைப்படங்களை போல டிவி தொடர்களுக்கும் தணிக்கை சான்று வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை. நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கினாலும் சரி, பா.ஜனதாவின் மாநில தலைவராக வந்தாலும் சரி அதை வரவேற்பேன் என கூறியுள்ளார்.