50 லட்சம் நிதியுதவி வழங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான

By leena | Published: Mar 24, 2020 12:58 PM

கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோயானது தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் 10-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. 

இந்நிலையில், பள்ளி, கல்லூரி நிறுவனங்கள், மக்கள் கூடும் வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் அடைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெப்சி நிறுவன தலைவர், ஆர்.கே.செல்வமணி அவர்கள் கூறுகையில், படப்பிடிப்பு முடங்கியதால் 15,000 சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார். 

இதனையடுத்து, நடிகர் சிவகார்த்திகேயன் 10 ஏற்கனவே லட்சம் நிதியுதவி வழங்கியுள்ள நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc