பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: புகார் அளித்த பெண்ணின் பெயரை குறிப்பிட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு!!

  • டிஜிபி ராஜேந்திரன் வழக்கை சிபிசிஐடிக்கு விரைவில் மாற்றப்படும் எனவும் கூறினார்.
  • புகார் அளித்த பெண்ணின் விவரங்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கோவை அருகேயுள்ள பொள்ளாச்சியில் வெளிப்படுத்தப்பட்ட ஒரு கொடூரமான பாலியல் துஷ்பிரயோகம் தமிழ்நாட்டை உலுக்கியது. இந்த சம்பவம் குறித்து புகார் அளித்த பெண்ணின் விவரங்களை அரசாணையில் குறிப்பிட்டு தமிழக அரசு வெளியிட்டடது. இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

கடந்த பல ஆண்டுகளாக சுமார் 250 க்கும் மேற்பட்ட பெண்களை ஆசை வார்த்தைகள் பேசி தன் வலையில் வீழ்த்தி கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர் சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பல்.

இதில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட திருநாவுக்கரசு, சதீஷ், சபரி ராஜன் மற்றும் வசந்த குமார் ஆகியோர் இம்மாதம் 5ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இந்த குற்றவாளிகளின் பின்னணியில் பல அரசியல் பிரபலங்கள்   இருப்பதால் காவல்துறை விசாரணை போக்கு சரியில்லை என குற்றங்கள் சாட்டப்பட்டனர்.

மேலும் இவர்களின் பின்னணியில் பல ஆளுங்கட்சி நபர்களும் இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் டிஜிபி ராஜேந்திரன் வழக்கை சிபிசிஐடிக்கு விரைவில் மாற்றப்படும் எனவும் கூறினார்.

பின்பு இதற்க்கு அரசாணை வெளியிட்டு, விசாரணையை துரிதப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த அரசாணையில், புகார் அளித்த பெண்ணின் விவரங்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெண்ணின்  கூட முடியலாம் என கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. இதை விரைவில் விராசிரிக்கவும்  விடுக்கப்பட்டுள்ளது.