பட்டு புடவைகளை பள பளப்பாக வைத்து கொள்ள சூப்பர் டிப்ஸ்

நாம் ஆசை ஆசையாய் சேர்க்கும் வாங்கி சேர்க்கும் உடைகளில் பட்டு புடவையும் ஒன்று.

By Priya | Published: Apr 07, 2019 08:50 AM

நாம் ஆசை ஆசையாய் சேர்க்கும் வாங்கி சேர்க்கும் உடைகளில் பட்டு புடவையும் ஒன்று. நாம் கடைகளுக்கு துணி வாங்க சென்றால் போதும் பட்டு புடவைகள் நம் கண்களை பறித்து விடும்.உடனே நாம் அதனை வாங்கி கொண்டு வந்து விடுவோம். அப்படி ஆசை ஆசையாய் நாம் சேர்க்கும் பட்டு புடவைகளை நமக்கு பராமரிக்க சரியாக தெரியாது.எனவே பட்டு புடவைகளை பராமரிக்க என்னென்ன வழிமுறைகளை பயன்படுத்தலாம் என இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

பட்டுபுடவை பள பளப்பாக வைக்க சூப்பர் டிப்ஸ்:

நாம் வாங்கும் பட்டு புடவைகள் மிகவும் விலை உயர்ந்ததாக தான் இருக்கும்.வாங்கும் போது நல்லா காஸ்லியா இருக்கும் பட்டு புடவைகளை நாம் வாங்கி விடுகிறோம். ஆனால் அதனை நம்மால் ஒழுங்காக பராமரிக்க முடியவில்லை.

பட்டுப்புடவையை எப்படி துவைப்பது :

  பட்டு புடவைகளை துவைக்கும் போது ரசாயனம் கலந்த சோப்பு மற்றும் வாஷிங் பவுடர்களை பயன்படுத்த கூடாது. பட்டு புடவையை சுத்தமான நீரில் அலசினாலே போதும். இவ்வாறு நாம் பட்டு புடவையை சுத்தமான நீரில் அலசினால் மிகவும் நல்லது. சோப்பு மற்றும் வாஷிங் பவுடர்களை பயன்படுத்தினால் பட்டு புடவையின் நிறம் மிகவும் சீக்கிரமாக மங்கிவிடும்.பட்டு புடவையை துவைக்கும் போது பாடர் மற்றும் ஜரிகை பகுதிகளை தனித்தனியாக துவைப்பது மிகவும் நல்லது. பட்டு புடவையை  அடித்து துவைக்க கூடாது.பட்டுப்புடவையை துவைத்த பின்பு பட்டு புடவையை இறுக்கி பிழிதலும் கூடாது.இவ்வாறு செய்யும் பொது பட்டுபுடவையில் உள்ள சரிகைகள் மிகவும் பாதிப்படையும். பட்டு புடவையை வெயிலில் காய வைக்க கூடாது. 3 மணி நேரம் நிழலில் காயவைத்து எடுப்பது போதுமானது.

பட்டு புடவை பாதுகாப்பு:

  பட்டு புடவைகளை நாம் எங்கு சென்று வந்தாலும் உடனே கழட்டி பிறகு துவைத்து கொள்ளலாம் என மடித்து வைக்க கூடாது. பட்டு புடைவைகளில் உள்ள சரிகைகளை பாதுகாக்க மாதம் ஒரு முறை பட்டு புடைவைகளை எடுத்து மடித்து வைப்பது மிகவும் அவசியம்.

பட்டு புடவை அயர்ன்:

  பட்டு புடவையை அயர்ன் பண்ணும் போது மிகவும் கவனமாக வைத்து அயர்ன் பண்ண வேண்டும்.பட்டு புடவையை அயர்ன் பண்ணும் போது மிதமான சூட்டில் வைத்து அயர்ன் பண்ண வேண்டும். பட்டு புடவைகளை பண்ணும் போது சரிகைகளின் உற்புறம் வைத்து அயர்ன் பண்ணுவது மிகவும் நல்லது. இவ்வாறு நாம் பட்டுப்புடைவைகளை கவனமாக வைத்து கொண்டால் பல ஆண்டுகளுக்கு கலர் மங்காமலும், ஜரிகைகள் சேதமடையாமல் பாதுகாக்கலாம்.      
Step2: Place in ads Display sections

unicc