மூக்கில் உள்ள வெண்புள்ளிகள் மறைய சூப்பர் டிப்ஸ்!

இன்றைய இளம் தலைமுறையினர் அதிகமாக தங்களது சரும அழகை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் இயற்கையான வழிமுறைகளை பின்பற்றாமல், செயற்கையான வழிமுறைகளை தான் பின்பற்றுகின்றனர். இதனால் பல பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது.

தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் மூக்கில் உள்ள வெண்புள்ளிகள் மறைய என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை

  • தயிர்
  • ஓட்ஸ்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில், ஓட்ஸ் மற்றும் தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை வெண்புள்ளிகள் உள்ள இடத்தில தடவ வேண்டும். 10-15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

பின்பு வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி, அப்பகுதியை மென்மையாக ஸ்க்ரப் செய்து கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் வெண்புள்ளிகள் தானாக மறைந்து விடும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.