குளிர்க்காலத்தில் சருமத்தை பராமரிக்கும் சூப்பர் டிப்ஸ்

குளிர்காலங்களில் நமது சருமம் மிகவும் வறண்டு காணப்படும். இதனால் நாம் பெரும் மனா உலைச்சலுக்கு ஆளாகிறோம். குளிர்காலத்தில் இதனால் வெளியே செல்வதை கூட நாம் விரும்புவதில்லை.

இந்த வறண்ட சருமத்தை நாம் காணும் போது அது நமக்கு மிக பெரிய மனஅழுத்தத்தை  கூட ஏற்படுத்தி விடுகிறது. மேலும் குளிர்காலங்களில் சருமம் மிகவும் சொரசொரப்பாகவும் காணப்படுவதாலும் சருமத்தின் அழகு போய்விடும்.

குளிர்காலங்களில் சருமத்தை பராமரிக்க சூப்பர் டிப்ஸ்:

 

குளிர்காலங்களில் நமது சருமத்தை பாதுகாக்க என்னென்ன வழிமுறைகளை பயன்படுத்தலாம் என்பதை இந்த படிப்பில் இருந்து படித்தறிவோம்.

தேங்காய் எண்ணெய்:

 

தேங்காய் எண்ணெய் நமது சருமத்திற்கு ஏற்ற மிக சிறந்த மாய்சரைசர்.இது நமது உடலுக்கு மிகவும் ஊட்டம் அளிக்கும்.மேலும் நமது உடலில் உள்ள வறட்சியை தடுத்து எப்போதும் ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கு மிகவும் பயன்படுகிறது.

மேலும்  தேங்காய் எண்ணெய்யை உடலில் வறட்சி இருக்கும் இடங்களில் நாம் குளிக்க செல்வதர்க்கு முன்பு தேய்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து குளித்து வருவது மிகவும் பயன் அளிக்கும்.

கடலை மாவு :

 

கடலை மாவு உடலுக்கு மிகவும் ஊட்டம் அளிக்கும். குளிர்காலத்தில் கடலைமாவு சருமம் தளர்ச்சியை போக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. குளிர்காலங்களில் தினமும் கடலைமாவு பயன் படுத்தி குளித்து வந்தால் முகம் பளிச்சிடும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணையை ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை சமவிகிதத்தில் எடுத்து சூடாக்கி சருமத்தில் பூசி வர சருமத்தில் உள்ள வறட்சி தடைப்படும்.

வேப்பிலை:

 

வேப்பிலை ஒரு மிக சிறந்த மூலிகை மருந்தாகும்.இது சித்த மருத்துவத்திலும் மற்றும் பல மருந்துகளிலும்  பயன்படுத்த பட்டு வருகிறது.  வேப்பிலையில் நிம்பின், நிம்பினென், நிமான்டியல் , ஆன்டி-பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் ஆகியவை அடங்கியுள்ளன. இது நமது உடலில் ஏற்படும் பல விதமான அலர்ஜிகளையும் நீக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. சொறி ,சிரங்கு என பல வகையான அலர்ஜிகளையும் நீக்க வல்லது.

குளிர்காலத்தில் வேப்பிலை மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து குளித்து வந்தால் உடலில் எந்த விதமான நோய்தொற்றுகளும் ஏற்படாது.

பப்பாளி :

 

பப்பாளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர அத்தியாவசிய  பல  ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.பப்பாளி  நமது உடலுக்கு பல நன்மைகளை தரவல்லது.பப்பாளி பழத்தை தினமும் உண்டு வந்தால் உடலில் இந்தத் விதமான நோய்களும் ஏற்படாது.

எனவே பப்லியை அரைத்து முகத்தில் பூசி மசாஜ் செய்த்து 15 நிமிடங்கள் கழித்து நன்கு கழுவினால் முகம் பளபளக்கும்.மற்றும் சரும வறட்சி நீங்கும்.

குளிர்காலத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள் :

 

குளிர்காலங்களில் கருவாடு ,தயிர் ,கீரை ஆகிய உணவுகளை உணவில் சேர்த்து கொள்வதை  தவிர்க்க வேண்டும். இதனால் சருமத்தில் அலற்சி ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம். குளிர்காலத்தில் இந்த குளுமையான உணவுகளை உண்பதை தவிர்த்து விட்டால் நமது உடலுக்கு மிகவும் நல்லது.

 

 

 

Leave a Comment