சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அதிரடி அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் எனும்

By manikandan | Published: Sep 10, 2019 06:15 AM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார்.  இப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதனை அடுத்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ரஜினிகாந்த் சம்மதித்துள்ளார், என்ற தகவல் வெளியானது. சிறுத்தை சிவா அடுத்ததாக சூர்யாவை வைத்து இந்த வருடத்திற்குள் படத்தை முடித்துவிட்டு பிப்ரவரி மாதம் ரஜினி படத்தில் இணைவார் என கூறப்படுகிறது. இதற்கிடையில் தற்போது புதிய தகவலாக தர்பார் இயக்குனர் முருகதாஸிடம் ஒரு கதையை ரஜினிகாந்த் கேட்டு உள்ளதாகவும் அந்த கதையும் ரஜினிக்கு பிடித்து உள்ளதாகவும் விரைவில் அதனை படமாக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு அடுத்து உருவாகுமா இல்லை அதற்கு முன்னரே உருவாகுமா என எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
Step2: Place in ads Display sections

unicc