சூப்பர் ஸ்டாரின் இரண்டு வருட சபதம்! நெகிழ்ச்சிகரமான சம்பவத்தை பகிர்ந்த ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் பட இசை வெளியீட்டு விழா நேற்று

By manikandan | Published: Dec 08, 2019 08:23 AM

  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் பட இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. 
  • அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தன் ஆரம்பகால சினிமா பயணத்தையும் தனது அவமானத்தையும், அதன் பிறகு அதனை வென்றதையும் குறிப்பிட்டார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல சுவாரஸ்ய சம்பவங்களை பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், ' கே.பாலச்சந்தர் சார் ரஜினிகாந்த் எனும் பெயர் மீது நம்பிக்கை வைத்தார். அதனால் அந்த பெயரை தைரியமாக வைத்தார். பைரவி படத்தை கலைஞானம் தயாரித்து இருந்தார். அவரும் நம்பிக்கை வைத்து தயாரித்தார். அதே போல மற்ற தயாரிப்பாளர்களும் நம்பிக்கையோடு தயாரித்தார்கள்.' என குறிப்பிட்டு, பின்னர், ' 16 வயதினிலே படத்தில் பரட்டை எனும் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தேன். அந்த சமயம் ஒரு தயாரிப்பாளர் ஏவிஎம் ஸ்டூடியோவில் வைத்து குறிப்பிட்ட தொகைக்கு சம்பளம் பேசி விட்டு பின்னர் ஆயிரம் ரூபாய் கம்மியாக கொடுத்திருந்தார். அதனால் நான் சூட்டிங் போகாமல் மேக்கப் ஏதும் போடாமல் ஆயிரம் ரூபாய் தந்தால் மேக்கப் போட்டுக் கொள்கிறேன் என பிடிவாதமாக நின்று கொண்டிருந்தேன்.  உடனே எனக்கு அந்த படத்தில் கதாபாத்திரம் இல்லை எனக்கு ஒரு கூறிவிட்டார். அதனை தொடர்ந்து அந்த இடத்தை விட்டு கிளம்பிவிட்டேன் .16 வயதினிலே படம் வந்தது பரட்டை கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. அதன் பிறகு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஏவிஎம் பட நிறுவனமே ஒரு முக்கிய படத்திற்காக என்னை அணுகி பெரிய தொகையை சம்பளமாக கொடுத்தனர். அதில் ஒரு விலை உயர்ந்த வெளிநாட்டு காரை வாங்கினேன். வெளிநாட்டு ஓட்டுநரை தேடினேன். கிடைக்கவில்லை உடனே ஆங்கிலோ இந்தியன் ஓட்டுநரை பணியமர்த்தினேன். அப்போது அந்த ஓட்டுநருக்கு புதிய சீருடை கொடுத்தேன். உடனே ஏ.வி.எம் ஸ்டுடியோவுக்கு வண்டியை விடுமாறு கூறினேன். அந்த தயாரிப்பாளர் என்னை எந்த இடத்தில் எனக்கு கதாபாத்திரம் இல்லை எனக் கூறினாரோ அதே இடத்திற்கு சென்று 555 சிகரெட் எடுத்து பற்றவைத்து அவர் முன்னால் நின்றேன். அங்கிருந்த எல்லோரும் எனது காரையும் அந்த காரின் ஓட்டுனரையும் பிரமிப்பாக பார்த்தனர். இவை அனைத்தையும் நான் இரண்டே வருடத்தில் செய்து முடித்தேன். அதற்கு காரணம் கடின உழைப்பும் ரசிகர்களின் அன்பும் என கூற அரங்கமே அதிரும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் கரகோஷம் எழும்பியது. அது அடங்க சில மணித்துளிகள் ஆனது.
Step2: Place in ads Display sections

unicc