"ரூபாய் 1,85,00,00,000 யை மிச்சம் செய்த சூப்பர் பிரதமர்" மக்கள் பாராட்டு..!!

"ரூபாய் 1,85,00,00,000 யை மிச்சம் செய்த சூப்பர் பிரதமர்" மக்கள் பாராட்டு..!!

பிரதமர் இம்ரான் கான் அலுவலக இல்லத்தில் தங்காமல் அரசுக்கு ரூ.185 கோடி சேமிக்க முடிவு செய்துள்ளார்.

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் ஆனவர் இம்ரான் கான்.அரசை நடத்த பாகிஸ்தானில் போதிய நிதி இல்லை என அவர் நேற்று கூறினார்.  இந்த நிலையில், தனக்காக ஒதுக்கப்பட்ட அலுவலக இல்லத்தில் தங்காமல் ரூ.185 கோடி அரசு நிதியை சேமிக்க முடிவு செய்துள்ளார்.இதனால் பொது மக்களின் வரி பணம் ஆடம்பரத்திற்காகவும் மற்றும் அரசு விதிகளுக்காகவும் பிரதமரால் வீணாக்கப்படவில்லை என்ற நற்செய்தி மக்களுக்கு கொண்டு செல்லப்படும். Image result for பிரதமர் இம்ரான் கான் பொறுப்பேற்ற பின்னர் பிரதமர் இல்லத்தில் தங்கவோ அல்லது வி.வி.ஐ.பி. அந்தஸ்தினை அனுபவிப்பதோ இல்லை என பல முறை பேட்டி மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் இம்ரான் கான் தெளிவுப்பட கூறியுள்ளார்.இதேபோன்று தனது கட்சியின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட மந்திரிகள் மற்றும் மாகாண முதல் மந்திரிகளும் நன்னடத்தைக்கான விதிகளை பின்பற்றுவார்கள் என உறுதி அளித்துள்ளார். Image result for பிரதமர் இம்ரான் கான் பிரதமர் இல்ல வளாக செலவுகளுக்காக ஆண்டுதோறும் ரூபாய் 98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.  இதேபோன்று பிரதமர் இல்ல ஊழியர்களுக்காக ரூபாய் 70 கோடி செலவிடப்படும்.உயரதிகாரிகள் மற்றும் விருந்தினர்களின் வருகைக்காக அவர்களுக்கு அளிக்கும் பரிசுகளுக்கு ரூபாய் 15 கோடியும் மற்றும் புதுப்பித்தல் மற்றும் அலங்கரித்தல் பணிகளுக்காக ரூபாய் 1.5 கோடியும் செலவிடப்படும்.இதுபோன்ற செலவுகளை குறைப்பதற்கான இம்ரான் கானின் இந்த வாக்குறுதி அவரது மதிப்பினை பாகிஸ்தான் மட்டுமின்றி உலகம் முழுவதும் நிச்சயம் உயர்த்தி பாராட்டையும் பெரும் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். DINASUVADU 

Latest Posts

#IPL2020: ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த பஞ்சாப்..!
டிசம்பர் 1 ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடக்கம்!
#IPL2020: சதம் விளாசிய தவான்.. 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி..!
ஆன்டிபாடிகள் குறைந்தால் குணமடைந்த நோயாளியை கொரோனா தாக்கும் - ஐ.சி.எம்.ஆர்
ஒரு நிமிடத்திற்குள் கொரோனாவை கண்டறியும் பரிசோதனை கருவி.!
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 50 பேர் உயிரிழப்பு!
#IPL2020: டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் பேட்டிங் தேர்வு..!
நகைச்சுவை நடிகர் கவுண்டமணி திரைப்படத்தில் நடிக்காததற்கு காரணம் என்ன தெரியுமா.?
அமெரிக்காவை விட இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது - பிரதமர் மோடி!
விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் -காவல்துறை வழக்குப்பதிவு