#IPL2020: கஷ்டமான சூழலில் சென்னை.. ராஜஸ்தான் அணிக்கு 126 ரன்கள் இலக்கு!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் குறைவான ரன்களை (126) இலக்காக வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இன்றைய 37-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி சாம் கரண் – டு பிளெசிஸ் களமிறங்கினார்கள்.

எதிர்பாராதவிதமாக 10 ரன்கள் மட்டுமே அடித்து டு பிளெசிஸ் வெளியேற, அவரைதொடர்ந்து களமிறங்கிய வாட்சன், 8 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அடுத்த ராயுடு களமிறங்க, 22 ரன்களில் சுட்டி குழந்தை சாம் கரண் ஆட்டமிழந்தார். 13 ரன்களில் ராயுடு அவுட் ஆக, அடுத்த களமிறங்கிய தோனி நிதானமாக ஆடினார்.

28 ரன்களில் தோனி ஆட்டமிழக்க, ஜடேஜாவுடன் கேதார் ஜாதவ் இணைந்தார். விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ள வைப்பரா? என்ற கேள்வி எழுந்த நிலையில், ஜடேஜாவிற்கு வாய்ப்பளித்து அவரை ஆடவிட்டார். இறுதியாக சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் அடிக்க, 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கவுள்ளது.