வினாடிக்கு 70 கன அடியாக நீர்வரத்து ஒகேனக்கல்லில் அதிகரிப்பு!

வினாடிக்கு 70 கன அடியாக நீர்வரத்து ஒகேனக்கல்லில் அதிகரிப்பு!

ஒகேனக்கல் காவிரியாற்றில் வினாடிக்கு 70 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கேரளா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே கடந்த மாதத்தில் பெய்த கனமழையால் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் முழுமையாக நிரம்பி இருந்தன. அப்பொழுது முதல் உபரிநீர் திறந்து விடப்பட்டு தமிழகத்தை நோக்கி காவிரி ஆற்றில் இன்று வரையிலும் பாய்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடிக் கொண்டே இருக்கிறது. எனவே ஒகேனக்கல் அருவிகள் மற்றும் தொங்கு பாலம் பகுதிகளுக்கு செல்ல கூடிய நடைபாதை வெள்ளத்தில் முழுமையாக மூழ்கி உள்ளது, அதிக நீர் வரத்தால் மீனவர்கள் மற்றும் பரிசல் ஓட்டுபவர்கள் ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தண்டோரா மூலம் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் காவிரி கரையோரத்தில், வருவாய்த்துறையினர் வனத்துறையினர் காவல்துறை, தீயணைப்புத்துறை ஆகியோர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube