சன் பிக்சர்ஸ் முக்கிய அறிவிப்பு : 'நம்ம வீட்டு பிள்ளை' டெலிட் செய்த காட்சி வெளியீடு..!

சன் பிக்சர்ஸ் முக்கிய அறிவிப்பு : 'நம்ம வீட்டு பிள்ளை' டெலிட் செய்த காட்சி வெளியீடு..!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிய படம் ‘நம்ம வீட்டு பிள்ளை’. மெரினா’ மற்றும் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் முன்றாவது முறை பாண்டிராஜ் உடன் இணைந்துள்ளார். இப்படம் கடந்த செப்.27ம் தேதி திரைக்கு வந்து வெற்றிநடை போடுகிறது. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனுக்கு தங்கச்சியாக நடித்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்துள்ளார். இப்படத்தில் பாரதிராஜா, யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், சூரி, நட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், சன் பிக்சர்ஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் டெலிட் செய்த காட்சியை நாளை காலை 11 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.

author avatar
Vidhusan
Join our channel google news Youtube