பிக்பாஸ் பிரபலமான ஐஸ்வர்யா தத்தாவின் 'PUBG' - இல் நடிக்கவிருக்கும் சன்னி லியோன்.!

பிக்பாஸ் பிரபலமான ஐஸ்வர்யா தத்தாவின் 'PUBG' - இல் நடிக்கவிருக்கும் சன்னி லியோன்.!

பிக்பாஸ் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் "PUBG" படத்திலுள்ள ஒரு பாடலுக்கு சன்னி லியோன் நடனமாடவுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் பிக்பாஸ் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் பொல்லாத உலகில் பயங்கர கேம்(PUBG). இந்த திரைப்படம் ஒரு நகைச்சுவை கலந்த திரில்லர் படமாகும். இதில் ஐஸ்வர்யா தத்தாவுடன் இணைந்து மேலும் ஐந்து கதாநாயகிகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனித்ரா, ஷாந்தினி, ரித்திகா, லியானா ஜான் ஆகியோர் ஆவர். மேலும் இந்த படத்தில் மொட்ட ராஜேந்திரன் மற்றும் பிக்பாஸ் 1 பிரபலமான ஜூலி, ஆரத்யா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இயக்குநரான விஜய் ஸ்ரீ 2019 ஆம் ஆண்டு வெளியான "தாதா 87" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆவர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரும், "நோ சூடு, நோ சொரனை" என்ற பாடலும் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படம் இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளதாகவும், விரைவில் ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திலுள்ள ஒரு ஸ்பெஷல் பாடலுக்கு நடனமாடுவதற்காக சன்னி லியோனை அணுகியதாகவும், அதற்கு அவர் ஒப்பு கொண்டதாகவும், விரைவில் அதனை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவரும் என்றும் இயக்குநர் விஜய் ஸ்ரீ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சன்னி லியோன் வடகறி என்ற தமிழ் படத்தில் நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சன்னி லியோன் தற்போது வீரமாதேவி என்ற தமிழ் படத்தில் நடித்தும் வருகிறார்.

 

Latest Posts

விடிய விடிய பெய்த கனமழையால் கடல் போல கட்சி தரும் சென்னை அண்ணா சாலை!
8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..... வானிலை ஆய்வு மையம்..!
முட்டை விலை 15 காசுகள் குறைந்து 4.75 க்கு விற்பனை...!
#IPL 2020: KKR கனவை தடுக்குமா CSK...?
தொடங்கியது பருவமழை! தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்!
யாரை வாழ்க்கையில மிஸ் பண்றீங்க .... கண்கலங்கும் போட்டியாளர்கள்!
இந்தியாவில் நேற்று கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
விசிக தலைவர் திருமாவளவன் உட்பட 200 பேர் மீது வழக்குப்பதிவு!
பிரேசில் தலைநகரில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து - ஒருவர் உயிரிழப்பு!
முதல்முறையாக நீரில் மிதக்கும் விமானம்சேவை அசத்திய ஸ்பைஸ்ஜட்