தரமான தெருக்கடை உணவு! மெரினா 'சுந்தரி அக்கா' கடைக்கு மத்திய மாநில உணவு தரச்சான்று!

சென்னை மெரினா கடற்கரையில், உழைப்பாளர் சிலைக்கு அருகில் இருக்கும் சுந்தரி

By manikandan | Published: Sep 16, 2019 05:15 PM

சென்னை மெரினா கடற்கரையில், உழைப்பாளர் சிலைக்கு அருகில் இருக்கும் சுந்தரி அக்கா கடை மிகவும் பிரபலம். நியாமான விலையில் தரமான ருசியான சாப்பாடு கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். தற்போது சுந்தரி அக்கா கடைக்கு மேலும் ஒரு பெருமையாக மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையும், மத்திய அரசு உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயம் ஆகியவை பாதுகாப்பான உணவுகளை வழங்குவதாக சான்று அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் தரமான தெருக்கடை உணவு என குறிப்பிடப்பட்டுள்ளது. சுந்தரி அக்கா கடையில், மீன், மட்டன், இறால் என அசைவ உணவுகள் கிடைக்கும். இந்த தரச்சான்று குறித்து சுந்தரி அக்கா கூறுகையில், ' இந்த சான்றை எனது வாடிக்கையாளர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். 'என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
Step2: Place in ads Display sections

unicc