கூகுளின் தாய் நிறுவனமான Alphabet நிறுவனத்திற்கு தலைமை பொறுப்பேற்றார் சுந்தர் பிச்சை..!

கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான சுந்தர் பிச்சை அந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் இன்க் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவரானா லாரி பேஜ் மற்றும் அல்ஃபாபெட்டின் தலைமை நிறுவகியாக இருந்து வந்தார். இந்நிலையில் அப்பதவிக்கு சுந்தர் பிட்சை நியமிக்கப்பட்டுள்ளார். ஆல்ஃபாபெட் நிறுவனமானது கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமாக உள்ளது. இது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது. இந்த நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.

உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் 5-ஆவது நிறுவனமாக இது கருதப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் லேரி பேஜும், சேர்ஜே பிரின்னும் தலைமை பதவியில் இருந்து வந்தனர். இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கூகுள் நிறுவனத்திற்கு சுந்தர் பிச்சை தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் அல்ஃபாபெட் நிறுவனத்தின் சிஇஓவாக (CEO) நியமித்தது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காக லேரிக்கும் சேர்ஜேவுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். நம்மிடம் நேரம் காலமற்ற பணி, உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது, ஒத்துழைப்பு கலாசாரமும் உள்ளது. எனவே நிறுவனத்தை மேலும் நல்ல முறையில் நடத்துவோம் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்தவர். சென்னை ஐஐடியில் படித்தவர். தற்போது மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் அமர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்