சீனா இந்தியாவிற்கு அச்சுறுத்தல் தர விரும்பவில்லை.! சீனா அமைதியை விரும்புகிறது.! - சீன தூதர் பேச்சு.!

சீனா அமைதியை வளர்க்கத்தான் விரும்புகிறது. மேலும், எந்தவித அச்சுறுத்தலையும்

By manikandan | Published: Aug 02, 2020 08:45 AM

சீனா அமைதியை வளர்க்கத்தான் விரும்புகிறது. மேலும், எந்தவித அச்சுறுத்தலையும் இந்தியாவிற்கு சீனா தர விரும்பவில்லை. - சீன தூதர் சன் வீடோங்.

டெல்லியில் செயல்பட்டுவரும் சீன கல்வி நிறுவனமானது (Institute of Chinese Studies (ICS) Delhi), ஆனது இந்தியா-சீனா உறவுகள் குறித்து ஒரு கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தது. இதில் பேசிய இந்தியாவுக்கான சீன தூதர் சன் வீடோங் இந்தியா சீன உறவு குறித்த பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

அதில், ' இந்தியா-சீனா உறவுகளை முன்னோக்கி நகர்த்த பல முக்கிய விஷயங்களில் சீனா தன் கருத்துக்களை நேரடியாக கூற வேண்டும். சீனா அமைதியை வளர்க்கத்தான் விரும்புகிறது. மேலும், எந்தவித அச்சுறுத்தலையும் இந்தியாவிற்கு சீனா தர விரும்பவில்லை.' என அவர் குறிப்பிட்டார்.

சீனாவும் இந்தியாவும் உலக தொழில் துறை மற்றும் விநியோக சங்கிலியில் பலமாக கட்டமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கணக்கிடப்பட்ட உள்ளூர் புள்ளிவிவரத்தின்படி, 2018-19 ஆம் ஆண்டில் மட்டுமே 92 சதவீத இந்திய கணினிகள், 82 சதவீத தொலைக்காட்சி பெட்டிகள், 80 சதவீத ஆப்டிகல் ஃ பைபர் பாகங்கள், 85 சதவீத மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்டவை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. மேலும், பல்வேறு பொருட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. ஆதலால் இந்த வர்த்தக சங்கிலியை மாற்றுவது சற்று கடினம்.' என அவர் கூறினார்.

'இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக தேவையானது, நுகர்வோரின் இயல்பான தேர்வு ஆகும். இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதாரத்தை துண்டிப்பது இழப்பிற்கு வழிவகுக்கும்.' என கூறினார் கால்வான் பள்ளத்தாக்கு மோதல் பற்றிய கேள்விகளுக்கு சீன தூதர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Step2: Place in ads Display sections

unicc