கோடைகாலத்தை அன்னாசி புட்டிங்குடன் ஜமாய்த்திடுவோம்

  • குளிர்ச்சியான அன்னாசி புட்டிங் செய்வது எப்படி?

கோடைகாலம் வந்தாலே மக்கள்அதிகமாக குளிர்பானங்களை தான் நாடுவர். ஏனென்றால் வெப்பம் அதிகமாக இருப்பதால், வெப்பத்திற்கு குளிர்ச்சியான பானங்களை குடித்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

Image result for அன்னாசி புட்டிங்

தற்போது குளிர்ச்சியான அன்னாசி புட்டிங் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • அன்னாசிப்பழம் – 2
  • கஸ்டர்ட் பவுடர் – 4 ஸ்பூன்
  • பால்பவுடர் – 12 ஸ்பூன்
  • சர்க்கரை – 12 ஸ்பூன்
  • பொடித்த முந்திரிப்பழம் & முந்திரிப்பருப்பு – அரைக்கப்
  • அன்னாசி எசன்ஸ் – அரை ஸ்பூன்

செய்முறை

அன்னாசி புட்டிங் செய்வதற்கு முதலில் அன்னாசி பழத்தை தோலை சீவி, அதனை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் கஸ்டர்ட் பவுடரினுள் தேவையான அளவு தண்ணீர் விட்டு கட்டி படாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். அதனுள் சர்க்கரை சேர்த்து மிக்சியில் போட்டு அடிக்க வேண்டும்.

Image result for அன்னாசி புட்டிங்

அதனுள் சிறிது சிறிதாக பால்பவுடர் சேர்த்து அடிக்க வேண்டும். பிறகு இந்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, பொடித்த முந்திரிப்பழம் மற்றும் முந்திரிப்பருப்பு மற்றும் அன்னாசி எசன்ஸ் ஆகியவற்றை அதனுடன் கலக்க வேண்டும்.

அதன்பின் இக்கலவையில் சிறிதளவு எடுத்து ஒரு உருண்டையான கிண்ணத்தில் ஊற்றி, அதன் மேல் அன்னாசி தண்டுகளை போட்டு 10 நிமிடம் பேக் செய்து வேண்டும். இப்பொது சுவையான அன்னாசி புட்டிங் ரெடி.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment