நாளிதழ் படித்துக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு !அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மரணம்!

  • தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலும்,இடைத்தேர்தலும்    நடைபெற உள்ளது.
  • சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலும்,இடைத்தேர்தலும்    நடைபெற உள்ளது.

காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏ கனகராஜ்:

அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஆவார்.இவருக்கு வயது 64 ஆகும்.

இவர் கடந்த 2016  ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் போட்டியிட்டு 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் கனகராஜ்.

எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்:

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.இன்று காலை நாளிதழ் படித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கிவிழுந்தார் கனகராஜ். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், அவர் முன்னரே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.இவரது மரணம் அதிமுகவினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மறைவை அடுத்து தமிழகத்தில் தற்போது 22 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment