தோல்விகளை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது : நடிகை பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல ஹிந்தி படங்களில்

By Fahad | Published: Apr 07 2020 01:50 AM

நடிகை பிரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல ஹிந்தி படங்களில் நடித்து, தற்போது இந்தி திரையுலகில் கொடிகட்டி பறக்கின்றார். இந்நிலையில், சமீபத்தில் இவர் குடும்பத்தினருடன் புகைபிடிக்கும் படம் ஒன்று வெளியானது. தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க கூடாது என்றும், தனக்கு ஆஸ்துமா உள்ளது என்றும் பேசிவரும் பிரியங்கா இப்படி புகைப்பிடிக்கலாமா என்று சமூக வலைதங்களில் அவரை திட்டியுள்ளார். இந்நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா, தனது சினிமா வாழ்க்கை குறித்து கூறுகையில், நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் மிகவும் கஷ்டப்பட்டேன். பட வாய்ப்பிற்காக அலைக்கழித்ததாகவும்,  இயக்குனர்கள் தன் கோபப்பட்டு திட்டுவதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், சினிமாவில் அந்த கஷ்டமான நாட்களில் அவரது தனத்தை அவ்ருக்கு ஆதரவாக இருந்ததாகவும், தோல்விகளை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.