"அசுரன்...வென்றான்" சமுத்திரக்கனியின் டிவிட்..! வெற்றிமாறனை பூமாலைக்குள் தேடல்...!

கடந்த வாரம் தனுசு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வெளியேறியது அசுரன்

By vidhuson | Published: Oct 11, 2019 03:18 PM

கடந்த வாரம் தனுசு நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வெளியேறியது அசுரன் படம். இப்படத்தில், மஞ்சு வாரியர், பசுபதி, பிரகாஷ் ராஜ் மற்றும் சில பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படமானது, எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜி.வி பிரகாஷின் இசை மாஸ் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் சண்டைக் காட்சிகள், வசனங்கள், தனுசின் நடிப்பு என அனைத்திலும் சிறந்த படமாக விழங்குகிறது. அசுரன் படத்தின் வெற்றி குறித்து தனுசு, வெற்றிமாறன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வந்தவனமாகவே உள்ளது. இந்நிலையில், பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான சமுத்திரக்கனி அசுரன் படத்தின் வெற்றிகாக வெற்றிமாறனை சந்தித்து ஆளை மறைக்கும் அளவுக்கு பூமாலை போட்டு சிறப்பித்துள்ளார். இந்த புகழை சமுத்திரக்கனி தனது ட்விட்டரில் "அசுரன்...வென்றான்..." என்ற ட்விட் உடன் வெற்றிமாறனுடன் உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். https://twitter.com/thondankani/status/1182208303100596224?s=09  
Step2: Place in ads Display sections

unicc