சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கு ! அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து அரசு  பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்றம்.

சென்னையில்  சுபஸ்ரீ என்ற இளம்பெண் தனது  ஸ்கூட்டியில்  வந்து கொண்டிருந்தபோது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.அப்போது  பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது.இதனால் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக  இளைய தலைமுறை அமைப்பை சேரந்த தமிழ் மணி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.இதில் சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.இந்த வழக்கை  நீதிபதி ரமேஷ் என்பவர் விசாரித்தார்.அப்போது தமிழக அரசு தரப்பில் இது தொடர்பான வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.மேலும் பதில் அளிக்க அவகாசம் கோரியது அரசு தரப்பு.

ஆனால்  சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார். சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும்  சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.மேலும்  மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து அரசு நாளை மறுநாள் பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி.