சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு ! அதிமுக பிரமுகர் ஜெயகோபால் முன் ஜாமீன் வழக்கு நாளை மறுநாளுக்கு ஒத்திவைப்பு

பேனர் விழுந்த விவகாரத்தில் ஜெயகோபால் முன் ஜாமீன் வழக்கு நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த

By venu | Published: Oct 15, 2019 12:04 PM

பேனர் விழுந்த விவகாரத்தில் ஜெயகோபால் முன் ஜாமீன் வழக்கு நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னையில் உள்ள பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் ஸ்கூட்டியில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து பின்னே வந்த லாரி அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மற்றும் மேகநாதன் கைது செய்யப்பட்டார்கள்.இந்த வழக்கில்  கைது செய்யப்பட்ட ஜெயகோபால், மேகநாதன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையில், வரும் 15-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளிவைப்பதாக  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி இன்று இதன் வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றது.இதனை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் விசாரித்தார் .அப்பொழுது உங்கள் வீட்டு மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள் என்றும் எந்த தவறும் செய்யவில்லை என்றால் எதற்காக தலைமறைவாக இருந்தீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் வழக்கின் விசாரணையை நாளை மறுநாள் தள்ளிவைப்பதாக உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி கார்த்திகேயன்.
Step2: Place in ads Display sections

unicc