தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி !

தமிழக  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
2003-ல் 100 மாணவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் பயனாளிகள் எண்ணிக்கை 100லிருந்து 200 ஆகவும், பெற்றோரின் ஆண்டு வருமான உச்சவரம்பு 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 72 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிதியுதவியை 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் பட்டதாரி சலுகை பெற்றிருந்தாலும், வரிய நிலையில் உள்ளவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் சிறப்பினமாக கருதி தொழிற்கல்வி உதவித் தொகை வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment