முதல்வர் எடியூரப்பாவுக்கு கருப்புக் கொடி காட்டி மாணவர்கள் எதிர்ப்பு.!

முதல்வர் எடியூரப்பாவுக்கு கருப்புக் கொடி காட்டி மாணவர்கள் எதிர்ப்பு.!

  • மங்களூரில் கடந்த 19-ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் இறந்தனர்.
  • இன்று  திருவனந்தபுரம் வந்த கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கருப்புக் கொடி காட்டி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த குடியுரிமை சட்ட திருத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் போராட்டம்  நடைபெற்று வருகிறது. மேலும் மத்திய பாஜக  அரசை கண்டித்தும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

கர்நாடகாவில் இந்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில் மங்களூரில் கடந்த 19-ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் இறந்தனர். மேலும் வன்முறையில் இறந்த குடும்பத்தினருக்கு  தலா ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்குவதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் மங்களூரில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது துப்பாக்கிச் குடு நடத்தியதை கண்டித்து இன்று  திருவனந்தபுரம் வந்த கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு கருப்புக் கொடி காட்டி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube