வகுப்பறையில் மாணவியை கடித்த பாம்பு...! ஆசிரியையின் அலட்சியத்தால் மாணவி உயிரிழப்பு..!

கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் சுல்தான் பத்தேரி பகுதியில் ஒரு

By murugan | Published: Nov 22, 2019 07:40 AM

கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் சுல்தான் பத்தேரி பகுதியில் ஒரு அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஷேஹலா என்ற மாணவி 5-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது வகுப்பறையில் ஆசிரியை நடத்திய பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வகுப்பறையில் இருந்த ஓட்டை வழியாக பாம்பு ஒன்று ஷேஹலாவை கடித்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த சக மாணவர்கள் ஆசிரியையிடன் கூறியுள்ளனர். ஆனால் ஆசிரியை ஷேஹலா பெற்றோர் அழைத்துச் செல்வார்கள் என கூறி பாடத்தைத் தொடர்ந்து நடத்தியதாக தெரிகிறது. இதனால் ஷேஹலா ஒரு மணி நேரம் தாமதமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பாம்பு கடித்ததில் விஷம் உடல் முழுவதும் பரவியதால் பரிதாபமாக ஷேஹலா உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கேரள அரசு விசாரணை நடத்தவும் , சம்பந்தப்பட்ட ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc