மாணவர்கள் விபத்து காப்பீடு: கூடுதல் அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை இயக்குனர்

பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீட்டு  தொடர்பாக

By Fahad | Published: Apr 06 2020 01:19 AM

பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீட்டு  தொடர்பாக கூடுதல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதாவது ,அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான விபத்து காப்பீட்டு திட்டத்தில் கூடுதல் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி ,"விடுமுறை நாளில், நீர் நிலைகளில் சிக்கி மாணவர்கள் இறந்தாலும் அரசின் நிவாரணம் ஏற்கப்படும். "பள்ளிகளில் மின் கசிவு மற்றும் ஆய்வக விபத்துகளில் மாணவர்கள் சிக்கினாலும் நிவாரணம்" ஏற்கப்படும் ."விஷ பூச்சிகள் கடித்து மாணவர்கள் பாதிக்கப்பட்டாலும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்" என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.மேலும் இந்த நிவாரணம் உடனடியாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.