இந்தியா முழுவதும் ஒருமணிநேரம் ரயில் நிறுத்த போராட்டம் !

தெற்கு ரயில்வேயில் உள்ள மதுரை ,திருச்சி ,சேலம் கோடங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்  நேற்று முன்தினம் திருச்சியில் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட தெற்கு ரயில்வே ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சூர்யபிரகாசம் அளித்த பேட்டியில் , இரண்டாவது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்த உடன் ரயில்வே துறையை தனியார் மயமாக்க தீவிர முயற்சி செய்து வருகிறது.

இந்திய முழுவதும் 13 லட்சம் அரசு ஊழியர்கள் ரயில்வே துறையில் பணியாற்றி வருகின்றனர். ரயில்வே துறையை தனியார் மயமாக்கப்பட்டால் ரயில் பயண சீட்டு விலை அதிகரிக்கும். மேலும் பயணிகளுக்கு  பாதுகாப்பான பயணமாக  இருக்காது. இதனால் தொழிலார்கள் வாழ்கை பாதிப்படையும் என கூறினார்.

மேலும் ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து இந்திய முழுவதும் விரைவில் ஒரு மணி நேரம் ரயில் நிறுத்த  போராட்டத்தை நடத்த உள்ளதாக கூறினார்.இந்த போராட்டத்தில் இந்திய முழுவதும் உள்ள 13 லட்சம் ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். இந்த போராட்டத்திற்கான தேதியை ரயில்வே தொழிற்சங்க அகில இந்திய அமைப்பு விரைவில் அறிவிக்கும் என கூறினார்.

author avatar
murugan