மேட்டுப்பாளையத்தில் போராட்டம் ..! போலீசாருக்கும் ,பொதுமக்களும் இடையே தள்ளுமுள்ளு ..!

கடந்த 4 நாள்களாக மழை நீடித்து வரும் நிலையில் மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர்

By murugan | Published: Dec 02, 2019 06:00 PM

கடந்த 4 நாள்களாக மழை நீடித்து வரும் நிலையில் மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் பகுதியில் உள்ள ஏடி காலனியில் உள்ள குடியிருப்பின் 20 அடி உயர கருங்கல் சுவர்  சாய்ந்ததால் இன்று அதிகாலை 3 மணி அளவில் நான்கு வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த சம்பவத்தின் போது  வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 17 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் 17 பேர்  உடலை மீட்டனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழக்க காரணமான வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யக் கோரி இறந்தவர்களின் உறவினர்களும் ,பொதுமக்களும் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தின் கைகலப்பு ஏற்பட்டதால் கூட்டத்தை கலைக்க போலீசார் முயன்றபோது பொதுமக்களுக்கும் ,போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Step2: Place in ads Display sections

unicc