உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

  • ஊராட்சி தலைவர் பதவி விலை ரூ.50 லட்சத்துக்கும்,துணைத் தலைவர் பதவி ரூ.15 லட்சத்துக்கு ஏலம்விடப்பட்டது என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
  • உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 27ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 30ம் தேதியும் நடைபெறுகிறது .வாக்கு எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில் கடலூர் பண்ருட்டி அருகே நடுக்குப்பத்தில் ஊராட்சி மன்ற பதவிகளுக்கு அதிமுக, தேமுதிக பிரமுகர்கள் ஏலத்தில் எடுத்துள்ளனர் என்று தகவல் வெளியாகியது.இந்த ஏலத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.50 லட்சமும் ,துணை தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சமும் தொகையாக நிர்ணயிக்கப்பட்டது.இந்த ஏலத்தில் அதிமுகவை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஊராட்சி மன்ற  தலைவர் பதவிக்கான ஏலத்தை எடுத்தார் என்றும் துணை தலைவருக்கான பதவியை தேமுதிகவை சேர்ந்த முருகன் என்பவர் எடுத்தார் ..ஊராட்சி தலைவர்,துணைத் தலைவர் பதவிகள் ஏலம்விடப்பட்டது என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏறபடுத்தியது.

 

இந்த நிலையில் இது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில், உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை  எடுக்கப்படும்.  சட்டத்திற்கும், மக்களாட்சி தத்துவத்திற்கும் புறம்பாக நடைபெறும். இத்தகைய செயல்கள் வருந்தத்தக்கவை ஜனநாயகத்திற்கு ஊறுவிளைவிப்பதை தடுக்க தேர்தல் அலுவலர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று  மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.