சமூக வலைத்தளங்களில் மதரீதியான பிரிவினையை ஏற்படுத்தினால் கடுமையான நடவடிக்கை! கேரள முதல்வர்அதிரடி!

சீனாவில் முதலில்  பரவிய கொரோனா வைரஸ் நோயானது, தற்போது இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு மிக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், மத பிரிவினையை தூண்டும் விதமாக, சமூக வலைத்தளங்களில் பல வதந்தியான செய்திகள் பரவி வருகிறது. இதனையடுத்து, சமூக வலைத்தளங்களில் மதரீதியான பிரிவினையை ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல்வர் பினரயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  மேலும், டெல்லி மத மாநாட்டில் பங்கேற்றவர்கள் குறித்து அவதூறு பரப்பப்படுவது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.