ஒரே வார்த்தையில் ஒட்டுமொத்த பாராட்டையும் தெரிவித்த STR!

ஒரே வார்த்தையில் ஒட்டுமொத்த பாராட்டையும் தெரிவித்த STR!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். தர்பார் படம் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ள நிலையில், இப்படத்தை பார்ப்பதற்கு தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் அலை கடலென திரண்டு வருகின்றனர். இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் படத்தை பார்த்து விட்டு,சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வெற்றி திரையரங்கில் தர்பார் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து விட்டு வெளியே வந்த  சிம்புவை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு படம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்க்கு சிம்பு "சூப்பர் மா" என ஒரே வார்த்தையில் பதிலளித்துள்ளாராம்.