மீண்டும் சின்னத்திரை சீரியல்கள் பார்க்கமுடியாது.! ஃபெப்சி தலைவரின் அதிரடி முடிவு.!

சின்னத்திரை படப்பிடிப்புகள் மற்றும் பெரிய திரை சினிமாவுக்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் வரும் ஜூன் 19 முதல்  நிறுத்தி வைக்கக்க ஃபெப்ஸி அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால், அந்த நான்கு மாவட்டங்களில் தற்போது மீண்டும் பொது முடக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன் காரணமாக ஏற்கனவே தடைபட்டு சில தினங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட சின்னத்திரை படப்பிடிப்புகள் மற்றும் பெரிய திரை சினிமாவுக்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் வரும் ஜூன் 19 முதல்  நிறுத்தி வைக்கக்க ஃபெப்ஸி அறிவித்துள்ளது. இதனை ஃபெப்சி நிறுவன தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.

தமிழக அரசு பொது முடக்கத்தை மீண்டும் அறிவித்துள்ளதால் தற்போது சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏறக்குறைய மூன்று மாத பொதுமுடக்கத்திற்கு பிறகு மீண்டும் சீரியல் பார்க்க எண்ணிய சின்னத்திரை ரசிகர்கள் தற்போது மீண்டும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.