பேனர் வைப்பதை நிறுத்துங்கள் !அதிமுகவினருக்கு பன்னீர்செல்வம், பழனிசாமி வேண்டுகோள்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர், கட் அவுட் வைப்பதை தவிர்க்க

By Fahad | Published: Mar 28 2020 05:39 PM

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர், கட் அவுட் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அதிமுகவினருக்கு பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளனர். பேனர் மேலே விழுந்து சென்னையில் இளம்பெண் ஒருவர் மரணம் அடைந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்திற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.   இந்த நிலையில் இது குறித்து அதிமுகவினருக்கு பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அந்த அறிக்கையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர், கட் அவுட் வைப்பதை தவிர்க்க வேண்டும்.மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு செயலிலும் அதிமுகவினர் ஈடுபட கூடாது.அறியாமையால் சிலர் செய்யும் செயலால், மக்கள் பாதிக்கப்படுவதால் மனவேதனை அடைகிறோம்.மேலும்  தலைமையின் அறிவுறுத்தலை கட்சியினர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.