ஸ்டெர்லைட் வழக்கு :ஜூன் 20ம் தேதி விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை  வெளியிட்டது தமிழக அரசு.
உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட்  ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்தது உச்சநீதிமன்றம்.அதில்  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.இதனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவன கோரிக்கைகையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.மேலும் உயர்நீதிமன்றத்தை நாட வலியுறுத்தியது உச்சநீதிமன்றம் .

பின்னர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி  நிர்வாகம் மனுதாக்கல் செய்தது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சசிதரன் அறிவித்ததை அடுத்து வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது.அதன்படி  வழக்கை நீதிபதி சிவஞானம், நீதிபதி பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோரிய வழக்கை ஜூன் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம்.மேலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த வைகோ மற்றும் பாத்திமாவின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.