முந்தைய காலத்தில் ஏற்பட்ட தவறுகளுக்காக ஸ்டெர்லைட் குற்றவாளியாக்க முடியாது -ஸ்டெர்லைட் தரப்பில் வாதம்.!

  • ஸ்டெர்லைட் வழக்கின் விசாரணை  இன்று முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் என உயர்நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
  •  முந்தைய காலத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் தவறுகளுக்காக தற்போது ஸ்டெர்லைட் நிறுவனத்தை குற்றவாளியாக்க முடியாது என ஸ்டெர்லைட் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி போராட்டம் நடைபெற்றது. போரட்டம் வன்முறை வெடித்தது இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்தனர்.

இதை தொடர்ந்து கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம்  ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும்  திறக்க அனுமதி கொடுத்தது.

பின்னர் உச்சநீதிமன்றதில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கொடுத்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மனு  தாக்கல் செய்தது.இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்  சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டிருந்தது.

இதை அடுத்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு 28 நாட்கள் விசாரணை நடத்தியது. இந்நிலையில்  கடந்த செப்டம்பர் மாதம் முதல் நீதிபதி சிவஞானம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளை விசாரித்து வந்ததால் ஸ்டெர்லைட் வழக்கின் விசாரணை நடைபெறாமல் இருந்தது.

இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் வழக்கை மீண்டும் விசாரணை நடத்த உள்ளதாகவும்  இந்த வழக்கை இன்று முதல் 20-ம் தேதி வரை விசாரணை நடைபெறும் என உயர்நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது , மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூடும்படி நீதிமன்றம்தான் உத்தரவிட முடியும். முந்தைய காலத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் தவறுகளுக்காக தற்போது ஸ்டெர்லைட் நிறுவனத்தை குற்றவாளியாக்க முடியாது என ஸ்டெர்லைட் தரப்பில் வாதிடப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நாளை மீண்டும் நடைபெறும் என நீதிபதிகள் கூறினர்.

 

author avatar
murugan