இவர்களுக்காகவாவது உள்ளே இருங்கள் - சூர்யா கொரோனா விழிப்புணர்வு வீடியோ!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தற்போது பலரும் அதற்கான விழிப்புணர்வு

By Fahad | Published: Apr 02 2020 01:09 PM

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தற்போது பலரும் அதற்கான விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். ஏனென்றால் அந்த தொற்று ஏற்பட்டால் தமிழகத்தில் உள்ள அனைவருமே பாதிக்கப்படுவது நிச்சயம். எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து நடிகர்கள், அரசியல்வாதிகள் தொழிலாளர்கள் என அனைவருமே இதற்கான விழிப்புணர்வுகளை  ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சூர்யா தற்போது இது குறித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், நமக்காகப் காவல்துறையினர் அனைவரும் தெருவில் நின்று உழைத்து கொண்டுள்ளனர். அவர்களுக்காகவாவது வீட்டுக்குள் இருங்கள்.

ஆனால் நம்மிடம் அவர்கள் கேட்பதெல்லாம் ஒன்றுதான், வீட்டிற்குள் இருங்கள் என்று மட்டும் தான் சொல்லுகிறார்கள். அனைத்து கல்லூரிகள் மற்றும் முக்கியமான இடங்கள் மூடப்பட்டிருக்கிறது. இனி வெளியில் செல்ல நமக்கு அவசியம் இல்லை எனவே வீட்டுக்குள்ளே பாதுகாப்பாக இருந்தால் கொரோனா வருவதை தடுக்கலாம் என்று கூறியுள்ளார்.